16th of January 2014
சென்னை::ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க , கௌதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கிய தாஸ் இயக்கும் '49 ஓ' படத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதுவும் கதையின் நாயகனாக கவுண்டமணி நடிப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்ப்பு தஞ்சாவூரில் நடைப்பெற்று வருகிறது. மழையை வர வைப்பதற்காக வருண தேவனை குளிர்விக்கும் வகையில் கவுண்டமணி பாடும் ஒரு பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் மழை வர உத்திர வாதம் அளிக்கிறதோ என்னவோ , சிரிப்பு மழைக்கு உத்திர வாதம் அளிக்கிறது.
கவுண்டமணியுடன் பணியாற்றும் உற்சாகத்தில் இருக்கும் இப்படத்தின் இயக்குனர் ஆரோக்கிய தாஸ், தனது அனுபவத்தை கூருகையில், "கவுண்டமணி சார் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மறக்க முடியாத அனுபவமாகும் .அவருடைய தொழில் பக்தி ஒப்பிட முடியாதது.
நகைசுவையில் அவருடைய பலம் டைமிங் சென்ஸ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , ஆனால் படப்பிடிப்பிலும் அவருடைய நேரம் தவறாமை, டைமிங் சென்ஸ் பிரமிப்பூட்டியது. இந்த படத்தில் அவர் உதிர்க்கும் வசனம் ஒவ்வொன்றும் அவரது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும் .49 ஓ அரசியல் படமல்ல , நகைசுவை மிளிர சொல்லப்படும் ஒரு புத்தி சாலித்தனமான படம்." என்று சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

Comments
Post a Comment