28th of January 2014சென்னை::நிச்சயம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்.. அதிலும் பிரிந்த காதலர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும்போது என்னதான் இயல்பாக இருக்க நினைத்தாலும் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதுதான் இப்போது பாண்டிராஜ் டைரக்ஷனில் நயன்தாராவுடன் நடித்துவரும் சிம்புவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் பேசும்போதும் சரி, காட்சிகளில் நடிக்கும்போதும் சரி.. சிம்புவால் முன்புபோல இயல்பாக இருக்கமுடியவில்லை என்பது படப்பிடிப்பில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு நன்றாகவே தெரிகிறதாம்.
குறிப்பாக சிம்பு இயக்கி நடித்த ‘வல்லவன்’ படத்தின்போது சிம்பு, நயன்தாராவின் அன்னியோன்யத்தை நேரில் பார்த்திருந்த சில டெக்னீசியன்கள் இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் அந்த வித்தியாசத்தை நன்றாகவே உணர்கிறார்களாம். தடுமாற்றம் இருக்கும்தான்.. ஆனால் போகப்போக சரியாகிவிடும்.. மேலும் படம் முடியும்போது நமக்கு ஆச்சர்யமான செய்தி ஒன்று கிடைத்தாலும் நாம் ஆச்சர்யப்படத் தேவையில்லை.::
Comments
Post a Comment