கார் மீது பஸ் மோதல் உயிர் தப்பினார் குஷ்பு!!!

28th of January 2014
சென்னை::நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகை குஷ்பு நேற்று காலை தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். சிக்னலுக்காக காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ் அவர் கார் மீது மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதம் அடைந்தது. பம்பர், விளக்குகள் உடைந்தன. இந்த சம்பவம்பற்றி குஷ்பு தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது:

எனக்கு காயம் எதுவும் இல்லை நான் நன்றாக இருக்கிறேன். ஆனால் முன்னே செல்லும் வாகனங்களைபற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தாறுமாறாக பஸ் ஓட்டிய டிரைவரை பற்றி எண்ணும்போது கோபம் வருகிறது. சாலை விதிகளை அவர்கள் கொஞ்சம் கடைபிடிப்பதில்லை. இதில் ரொம்பவும் சோகமான விஷயம் என்னவென்றால் கார் மீது பஸ் மோதிய பிறகு எனது கார் நகர முடியாமல் ரிப்பேராகி நின்றுவிட்டது.  அவர்கள் மீது புகார் கொடுத்தால் அவர்களது சங்கம் அவரை காப்பாற்ற வரும். மேலும் டிரைவர் என்னிடம் தனது குடும்பம், எதிர்காலம்பற்றி முறையிட்டு விட்டுவிடும்படி கேட்பார். அப்போது உண்மையிலேயே உதவிக்கு ஆளில்லாமல் நிற்க வேண்டி இருக்கும்.

இந்த கார் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. எனது கணவர் அதை பரிசாக அளித்திருந்தார். நல்லவேளையாக எனக்கு உடலில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் இது எனக்கு ரொம்பவே கெட்ட நாளாக அமைந்துவிட்டது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments