6th of January 2014
சென்னை::தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல் அகர்வால். ஹீரோயின்களுக்குள் போட்டி அதிகரித்து வருகிறது. கால்ஷீட் பிரச்னை, சம்பள வித்தியாசத்தால் ஒருவர் வாய்ப்பை மற்றொரு ஹீரோயின் பறிக்கும் நிலை உள்ளது.
டோலிவுட்டில் வம்சி இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தில் நடிக்க தமன்னாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல் காலம் கடத்தி வந்தார். ஷூட்டிங் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்ததையடுத்து அவரிடம் இதுபற்றி இயக்குனர் வம்சி பேசினார். அப்போது, ‘வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி தந்திருப்பதால் இப்படத்துக்கு ஒட்டுமொத்தமாக அதிக நாட்கள் கால்ஷீட் தர முடியாது என்று பதில் அளித்தார்.
இதையடுத்து தமன்னாவுக்கு பதிலாக வேறு ஹீரோயினை தேடினர். இறுதியல் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆனார். கால்ஷீட் பிரச்னை என தமன்னா சொன்னதுமே தூது விட்டு காஜல் இந்த வாய்ப்பை பறித்துக்கொண்டதாக பேசப்படுகிறது. இதுபற்றி வம்சி கூறும்போது,‘இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார். இதேபடத்தில் வெங்கடேஷ் நடிப்பதாக இருந்தது. அவரும் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்க உள்ளார்.

Comments
Post a Comment