கட்டுக்காவலை தளர்த்தினார் ஸ்ரீதிவ்யா!!!

15th of January 2014
சென்னை::
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அந்த படத்தில் நடித்தபோது படநாயகன் சிவகார்த்திகேயனுடன்கூட அதிகமாக பேசினதில்லையாம். அந்த அளவுக்கு யாருடனும் மகளை பேச விடாமல் கட்டுக்காவல் போட்டிருந்தாராம் அவரது தாய்குலம். இதை அப்படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்தார் சிவகார்த்திகேயன். அதோடு, அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிற சாக்கில் கடலை போட்டதாக வெளியான செய்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார் சிவா.

ஆனால், சிவகார்த்திகேயன் கதாநாயகியுடன் என்னை நாலு வார்த்தைகூட பேசவிடவில்லை என்று ஸ்ரீதிவ்யாவின் தாய்குலத்தை நேரடியாக குற்றம் சாட்டியதால், இப்போது நாம் இப்படி யாருடனும் பேசகூட விடாமல் தடைபோடுவது மகளின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை புரிந்து கொண்ட நடிகையின் தாய்குலம், வட்டம் போட்டு அதற்குள் மகளை நிற்க வைப்பதை நிறுத்தி விட்டாராம். இதனால் ஹீரோக்களுடன் ஜாலியாக சிரித்து பேசி நேரத்தை செலவிடுகிறாராம் ஸ்ரீதிவ்யா. அந்த வகையில, லட்சுமிமேனன், நஸ்ரியாவை மிஞசும் கலகலப்பு நடிகையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
tamil matrimony_HOME_468x60.gif

Comments