ஒப்பந்தம் மீறியதாக கூறி கௌதம் வாசுதேவனிடம் விசாரனை - ஐகோர்ட்டு உத்தரவு!!!


12th of January 2014
சென்னை::இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, திரிஷா நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப்படத்தை தயாரிப்பை தொடர்ந்து சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:–
 
எங்கள் நிறுவனமான ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற சினிமா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பியது.
இதற்காக போட்டோன் காதாஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சசிகலாதேவி, வெங்கட் சோமசுந்தரம், கவுதம் வாசுதேவ் ஆகியோர் கூறியபடி ரூ.2.75 கோடி தொகையை கொடுத்தோம்.
 
இந்த நிலையில் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து போட்டோன் கதாஸ் நிறுவனம் ரூ.1.98 கோடி தொகையை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின்படி எங்களுக்கு சேரவேண்டிய பங்கு தரப்படவில்லை. ஒப்பந்தத்துக்கு மாறாக நடந்துகொண்ட போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கவுதம் வாசுதேவ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. ஆனால் அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று ஐகோர்ட்டில் ஜெயராமன் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், ஜெயராமன் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழு நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் ரமேஷ்பாபு ஆஜரானார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments