சுந்தர்.சி படத்தில் நடிக்க அஜீத் மறுப்பு!!!

6th of January 2014
சென்னை::வீரம் படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜீத் தற்போது குடும்பத்தினர்களுடன் வெளிநாட்டி தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.தொடர்ந்து அவர், வெளிநாட்டில் வைத்தே தன்னுடைய மகளின் 6வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.
 
வீரம் படம் வெளியாகும் ஒருநாள் முன்பாக அதாவது வரும் 9ம் தேதி இரவுதான் அஜீத் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் அஜீத் குறித்து ஒரு பரபரப்பான தகவல் வெளி வந்துள்ளது.
அஜீத் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு முந்தைய நாள் அவரை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் அவருடைய வீட்டுக்கு சென்று சந்தித்தாராம். அப்போது குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும்படி கேட்டார்களாம். ஆனால் அஜீத்தோ இப்போதைக்கு தன்னுடைய முழு கவனமும் கெளதம் மேனன் படத்தில் மட்டுமே இருக்கும் என்றும் அதற்கு அடுத்த படம் என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறிவிட்டாராம்.
மேலும் எதுவாக இருந்தாலும், தன்னுடைய வெளிநாட்டு பயணம் முடிந்து நாடு திரும்பியவுடன் பேசிக்கொள்ளலாம் என்று மழுப்பலாக பதில் கூறி அவர்களை அனுப்பிவிட்டாராம்.
அஜீத்துக்கு ஏற்கனவே திமுக ஆட்சியின்போது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருப்பதால், திமுகவில் முக்கிய தலைவராக வளர்ந்து வரும் குஷ்புவுடன் தொழில் ரீதியான உறவு வைத்துக்கொள்ள அஜீத் விரும்பவில்லை என அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
tamil matrimony_HOME_468x60.gif

Comments