28th of January 2014
சென்னை::பிரபுதேவாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ். அதுமட்டுமல்ல, சிவசங்கர், லாரன்ஸ் போன்றவர்களிடமும் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்த இவர் தற்போது இயக்கிவரும் படம் தான் ‘நான் பொன்னொன்று கண்டேன்’. நாயகனாக அறிமுகமாகும் மாநிலக் கல்லூரி மாணவர் அஸ்வின்ராஜ் தடகள வீரர்.. அதிலும் மாநில அளவில் சாம்பியன். நாயகி அனாமிகாவோ மிஸ் போபால், மிஸ்மத்தியப் பிரதேசம் பட்டங்கள் வென்றவர்.
சொர்ணாக்கா நமக்கு தெரியும்.. பேயக்காவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? இந்தப்படத்தில் பேயக்கா என்கிற பெண்தாதா வருகிறார். சொர்ணாக்காவுக்குப்பின் இந்த பேயக்கா பேசப்படுவார். படத்தில் மொத்தம் 5 பாடல்களில் நடிகை கஸ்தூரி ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் நட்புக்காக ஆடியுள்ளார்.
பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் இருட்டு உலகம் பலரும் அறியாதது. கட்ட பஞ்சாயத்து என்கிற பெயரில் கல்லாக்கட்டும் கூட்டம், பாலியல் தொழில், சுரண்டல்கள் என அனைத்தையும் வேடிக்கை பார்த்து உள்வாங்கிக் கொண்டு மௌன சாட்சியாக விளங்குகிற பேருந்து நிலையம் படத்தில் ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது.
கில்லி’ படத்தில் இடம்பெற்றுள்ளதுபோல இந்தப்படத்தில் வரும் முக்கால் மணி நேரத் துரத்தல் காட்சி பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். தேனி, கம்பம், மூணாறு, உசிலம்பட்டி, தேக்கடி, சென்னை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.::
Comments
Post a Comment