31st of January 2014
சென்னை::கமலுக்கும் மோகன்லாலுக்கும் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ஏற்பட்ட நட்பு, தொட்டுத் தொடர்வதை பூர்வஜென்ம பந்தம் என்றுதான் சொல்லவேண்டும். மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதை வேறு எப்படி சொல்வது?

‘த்ரிஷ்யம்’ படம் வெளியான சில நாட்களிலேயே அந்தப்படத்தின் மற்ற மொழிகளுக்கான ரீமேக் உரிமைகள் உடனே விற்றுவிட்ட அதிசயமும் நடந்தது. இந்தப்படத்தை பார்த்த விக்ரம் கூட இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் தன் ஆர்வத்தையும் வெளியிட்டார்.
ஆனால் படத்தை பார்த்த பலரும் மோகன்லாலின் நடிப்பை பாராட்டியதோடு இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது அதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லிவந்தார்கள். இப்போது அது உண்மையாகவே ஆகிவிட்டது. ஃபேமிலி த்ரில்லராக ரசிகர்களை கவர்ந்த இந்தப்படத்தை தமிழில் நடிகை ஸ்ரீப்ரியாவும் தயாரிப்பாளர்
சுரேஷ் பாலாஜியும்(மோகன்லாலின் மைத்துனர்) இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Comments
Post a Comment