15th of January 2014
சென்னை::கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.
சென்னை::கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.
தற்போது இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இதற்காக அவர் ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு மும்பையில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில் இலியானா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் மும்பை பாந்த்ரா ஓட்டலுக்கு இருவரும் ஜோடியாக வந்து டின்னர் சாப்பிட்டு போயிருக்கிறார்கள்.
இருவரும் நடந்து கொண்ட விதம், காட்டிய நெருக்கம் அவர்கள் காதலர்கள்தான் என்பதை உறுதி படுத்துவதாக ஓட்டல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இலியானாவுக்கு அவரது வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.
தான் ஆண்ட்ருவை காதலிப்பதை பெற்றோர்களுக்கும், மீடியாக்களுக்கும் தெரியப்படுத்துவதற்காகவே இலியானா காதலனுடன் வெளிப்படையாக சுற்ற ஆரம்பித்திருக்கிறார் என்கின்றன இந்தி மீடியாக்கள்.
Comments
Post a Comment