டூப் இல்லாமல் 'வீரம்' காட்டிய அஜித்!!!

4th of January 2014
சென்னை::
படப்பிடிப்புகளில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனை, அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என்று இருந்தாலும், அஜித், படத்திற்குப் படம் சண்டைக் காட்சிகளில் எதையாவது ரிஸ்க்காக செய்துகொண்டு தான் இருக்கிறார்.

'ஆரம்பம்' படத்தில் சண்டைக்காட்சிகளில் அசத்திய அஜித், தற்போது 'வீரம்' படத்திலும் டூப் ஏதும் இல்லாமல் அசத்தியிருக்கிறாராம்.

இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சண்டைக் காட்சியை அமைத்துவிட்டு, டூப் போடலாம் என்று சொல்வாராம். ஆனால், அஜித்தோ,
 
அவர்களுக்கு என்ன நடக்குமோ அது தானே எனக்கும் நடக்கும். அவர்களுக்கு அடிப்பட்டால் அதுதானே எனக்கும் படும். பெயர் என்னவோ எனக்கு மட்டும் தானே வரப்போகிறது, அதற்கு நானே டூப் இல்லாமல் செய்கிறேன்." என்று கூறி அத்தனை ரிஸ்க்கான காட்சிகளையும் ரஸ்க்காக நினைத்து செய்துள்ளாராம்.

ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் வீரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இதை, சில்வா கூறினார். இந்த சந்திப்பின் போது அஜித் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இயக்குநர் சிவா, பத்தொகுப்பாளர் காசிவிஸ்வநாத், ஒளிப்பதிவாளர் வெற்றி, சண்டையிப் பயிற்சியாளர் சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து இயக்குநர் சிவாவிடம் கேட்டதற்கு, "முதலில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பி தான் இப்படி ஏற்பாடு செய்தோம். அடுத்ததாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்துகொள்வார்கள்." என்று தெரிவித்தார்

tamil matrimony_HOME_468x60.gif

Comments