மீண்டும் மும்பை செல்லும் அஞ்சான் டீம்!!!

22nd of January 2014
சென்னை::மும்பைக்கு ஃபிளைட் புக் செய்துவிட்டே இப்போது கதை கேட்கிறார்களோ என சந்தேகமாக இருக்கிறது. விஜய் மும்பை போகிறார்... அ‌‌ஜீத் போகிறார்... சூர்யா போகிறார்... ஏன் கமல்கூட போகிறார்... எல்லா ஸ்டார்களும் மும்பையில் லேண்ட் ஆவது படப்பிடிப்புக்காக.

படத்துக்கு தேசிய ஃப்ளேவர் கிடைக்க மும்பை சென்டர் பாயிண்ட். அந்த ஆராய்ச்சிக்குள் நுழையாமல் அஞ்சானுக்கு வருவோம். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சானின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. சில நா‌ட்கள்தான். கொஞ்ச காலம் அடங்கியிருந்த சமந்தாவின் சருமப் பிரச்சனை தொந்தரவு தர, பேக்கப் சொல்லி முதல் ஷெட்யூலை பாதியில்விட்டு சென்னை திரும்பினர். சில நா‌ட்கள் ஓய்வுக்குப் பின் சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பிரச்சனையின்றி இனிதே முடிந்தது முதல் ஷெட்யூல்.

இரண்டாவது ஷெட்யூல் அதே மும்பையில் ஜனவ‌ரி 22 - அதாவது நாளை தொடங்குகிறது. படத்தின் ஒரு தயா‌ரிப்பாளரான யுடிவி நிர்வாகி தனஞ்செயன் இந்த தகவலை தெ‌ரிவித்துள்ளார். மும்பை மட்டுமின்றி கோவா மற்றும் மகாராஷ்டிராவின் வேறு சில பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது.
மனோ‌ஜ் பா‌ஜ்பாய், வித்யுத் ஜமால் போன்ற ஹிந்திப்பட பிரபலங்களும் படத்தில் இருக்கிறார்கள்.

மும்பை லொகேஷன், ஹிந்தி நடிகர்கள்... ஒரு விஷயம் உடனே பு‌ரிந்திருக்குமே. படம் தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. யுடிவியுடன் இணைந்து திருப்பதி பிரதாஸ் படத்தை தயா‌ரிப்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments