ஒன்றரை கோடியில் ஒரு செட் - 'அரிமா நம்பி' யை நம்பும் தாணு!!!

1st of January 2014
சென்னை::துப்பாக்கி' கொடுத்த வெற்றியால் பெரும் குஷியடைந்திருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, பார்க்கும் உதவி இயக்குநர்களையெல்லாம் கதை ரெடி பண்ணுங்க....கதை ரெடி பண்ணுங்க என்று கூறிக்கொண்டிருக்கிறார். அப்படி அவருடைய தூண்டுதலின் பேரில் 'அரிமா நம்பி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகப் போகிறவர் தான் 'ஆனந்த் சங்கர்.

ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய இரண்டுப் படங்களில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, ஆனந்த் சங்கரிம், தானு விஜய்க்கே கதை ரெடி பண்ண சொன்னாராம். ஆனால், முதலில் ஒரு வலரும் ஹீரோவை வைத்து இயக்கிவிட்டு பிறகு விஜய்க்கு போவோம், என்று பெருந்தன்மையுடன் கூறிய, ஆனந்த் சங்கர், தற்போது அரிமா நம்பி படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் மூலம், பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாலர் தானு, பிரபு சார் விக்ரமை அழைத்துக்கொண்டு முதலில் என்னிடம் தான் வந்தார். என் பையனை வைத்து முதல் படம் நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என்று பெருந்தன்மையுடன் கூறினார். ஆனால், சில காரணங்களுக்காக தற்போது அருடைய மூன்றாவது படத்தை நான் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த படத்தை இயக்கியுள்ள ஆனந்த் சங்கர், மிகவும் திறமை வாய்ந்தவர். அரிமா நம்பி படம் ஒரு இடத்தில் கூட படம் பார்ப்பவர்களின் கவனத்தை சிதைக்காத வன்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக ஒரு பாடலில், மொராக்கோ மாளிகை ஒன்றை ஒன்றரை கோடி செலவில் செட் அமைத்திருக்கிறோம். அதைப் படத்தில் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக பரவசமடைவார்கள்." என்று நம்பிக்கையுடன் கூறினார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments