21st of January 2014
சென்னை::வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாள் வருகிறது. அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி காதலர்தினமும் வருகிறது. அதனால் கடந்த வருடம் படம் எதுவும் தராமல் தனது ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு, இந்த புது வருடத்தில் தனது பங்களிப்பை மிக மிக அழகாக அழுத்தமாக தர முடிவு செய்திருக்கிறார்.

தனது பிறந்தநாள் அன்று தான் நடித்துவரும் ‘வாலு’ படத்தின் சிங்கிள் ட்ராக்கையும் காதலர் தினத்தன்று படத்தின் மற்ற பாடல்களையும் வெளியிட முடிவு செய்துள்ளார் சிம்பு. ‘யூ ஆர் மை டார்லிங்’ எனத்தொடங்கும் இந்த சிங்கிள் ட்ராக்கை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்தப்பாடலை மறைந்த ஜாம்பவான் கவிஞர் வாலி எழுதியிருக்க வேண்
டியதாம். அதனால் மிகுந்த சிரத்தை எடுத்து இந்தப்பாடலை எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.
யூ ஆர் மை டார்லிங்’ என்று தனது காதலியை பற்றி சிம்பு வர்ணித்துப் பாடுவதாக அமைந்துள்ள இந்தப்பாடலில் “நயன்தாரா வேண்டாம்.. ஆண்ட்ரியா வேண்டாம்..” என்ற வார்த்தைகளும் இடம்பெறுகிறதாம். இது படத்தில் தனது காதலியான ஹன்சிகாவை பார்த்து சிம்பு பாடுகிறார் என்பதால் சிம்புவின் கரண்ட் சிச்சுவேஷனை அப்படியே பாட்டில் கொண்டு வந்திருக்கிறாராம் மதன் கார்க்கி. இதுதவிர இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா ஆகியோரின் பெயர்களும் இந்தப்பாடலில் இடம்பெறுகிறதாம். இந்தப்படத்திற்கு இசையமைக்கும் தமன் தான் இந்தப்பாடலையும் பாடியிருக்கிறார..
Comments
Post a Comment