30th of January 2014
சென்னை::நடிகர்கள் நாசர், விஷால், சிவக்குமார், சந்தானம் ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து நடிகர் நாசர் கூறுகையில், "எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோதி இருக்கலாம்.
சிவக்குமார், விஷால், சந்தானம் போன்றோருக்கும் இது போல் மிரட்டல் விடுத்து மொட்டை கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தேன். இதனை நான் சும்மா விடப்போவது இல்லை. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் போலீசில் புகார் அளிப்பது குறித்து முடிவு செய்வேன்." என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment