அவசர கல்யாணம் ஏன்? சமீரா ரெட்டி விளக்கம்!!!

26th of January 2014சென்னை::அவசர கல்யாணம் செய்தது ஏன் என்று சமீரா ரெட்டி விளக்கம் கூறியுள்ளார்.வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.
 
இவருக்கும், ‘பைக்’ தொழிற்சாலை அதிபர் அக்ஷய் வர்தேவுக்கும் வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கவிருந்தது. திடீரென 3 மாதம் முன்பாகவே கடந்த 21ம் தேதி இவர்கள் திருமணம் அவசரமாக நடந்து முடிந்தது. திருமணத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் யாரும் அழைக்கப்படவில்லை. குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.‘அவசர திருமணம் செய்தது ஏன்’ என்பதற்கு சமீரா பதில் அளித்தார்.
 
அவர் கூறியதாவது:
 
ஏப்ரல் மாதம்தான் திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்தோம். எனது தங்கை மேக்னாவும், அக்ஷயின் சகோதரியும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி போய் விட்டால், மீண்டும் ஏப்ரல் மாதம் வர இயலாது என்று கூறினார்கள். அவர்கள் இருக்கும் போதே திருமணம் செய்ய முடிவெடுத்தோம். ஜனவரி 21ம் தேதி நல்ல நாள்னு புரோகிதர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அக்ஷய், ‘21ம் தேதியே திருமணம் வைத்து கொள்ளலாமே’ என்றார். நானும் சம்மதித்தேன். உடனடியாக எல்லா ஏற்பாடுகள் நடந்து முடிந்தது.
 
 
சினிமாவில் 11 வருடம் இருந்துள்ளேன். இதற்காக நிறைய மேக்கப் அணிந்து விட்டேன். என் திருமணத்தில் எளிமையாக இருக்கவேண்டும் என்பதால் சேலை உடுத்தினேன். மேலும் சினிமா துறையில் இல்லாத ஒருவரைத்தான் திருமணம் செய்ய எண்ணி இருந்தேன். அது நடந்துள்ளது. எங்களது தேனிலவு வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. தேனிலவு கொண்டாடும் ஊருக்கு மோட்டார் சைக்கிளிலேயே செல்ல முடிவு செய்திருக்கிறோம். ::
tamil matrimony_HOME_468x60.gif

Comments