ஹீரோயின்கள் சூப்பர்: கார்த்திக் ஜொள்!!!

19th of January 2014
சென்னை::கடல்’ கவுதம் நடிக்கும்  படம் ‘என்னமோ ஏதோ’. ரகுல் பிரீத் சிங், நிகிஷா படேல் ஜோடி. ரவி தியாகரா
 
ஜன் டைரக்டு செய்கிறார். கார்கி பாடல். டி.இமான் இசை. பி.ரவிகுமார். பி.வி.பிரசாத் தயாரிப்பு.

இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கவுதம் தந்தை நடிகர் கார்த்திக் பேசும்போது, இன்றைய தினம் திரையுலகம் இளைஞர்கள் வசம் இருக்கிறது. திறமையாக பணியாற்றுகின்றனர். சிறந்த படங்களை தருகின்றனர்.


சாதனையாளர் வைரமுத்து மகன் கார்கி அருமையாக பாடல்கள் எழுத, டி.இமான் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். என் மகன் கவுதம் எனக்கு செல்லப் பையன். அவனுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும். இப்போது வரும் ஹீரோயின்கள் அழகாக செம சூப்பராக இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது என்றார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments