28th of January 2014சென்னை::மிகப்பெரிய இடைவெளிதான். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக நான்கு வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர்தான்.. ஆனால் தன்னை மீண்டும் நிரூபித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தின் மூலம் வரும் 30ஆம் தேதி கோதாவில் குதிக்கிறார் இயக்குனர் விக்ரமன்.
இந்தப்படத்தில் புதுமுகங்களாக அவர் அறிமுகப்படுத்தியுள்ள ரஞ்சித், நிமிஷா இருவருக்கும் திரையுலகில் நல்ல எதிர்காலம் உண்டு குறிப்பிட்டுள்ளார் விக்ரமன். இதை தான் ஒப்புக்காக மட்டுமே சொல்லவில்லை என்று கூறும் விக்ரமன் அதற்கு அழுத்தமான ஒரு உதாரணத்தையும் கூறுகிறார்.
பூவே உனக்காக’ படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது பின்னாளில் விஜய் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே கூறினேன்.. ஆனால் அப்போது வளரும் நிலையில் இருந்த விஜய்யை பார்த்து நான் அப்படி கூறியதைக் கேட்டு பலரும் சிரித்தார்கள்.. ஆனால் இன்றைக்கு அது உண்மையாக ஆயிற்று.. அதேபோலத்தான் இந்தப்படத்தின் கதாநாயகன், நாயகிக்கு தமிழ்சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. இப்போதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் விக்ரமன் நம்பிக்கையுடன்.::
Comments
Post a Comment