இறங்கி வரமாட்டேன்! பிடிவாதம் செய்யும் தமன்னா!!!

27th of January 2014
சென்னை::
செகண்ட் ரவுண்டில் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, வீரம் படத்தில் நடித்த பிறகு இன்னும் தமிழில் அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தனது அபிமானத்திற்குரிய டைரக்டர்கள், ஹீரோக்கள் என சிலரிடம் படவிசயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், நயன்தாரா ஜெய் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருப்பதைப்பார்த்து, தமன்னாவுடன் டூயட் பாட ஆசைப்படும் சில இரண்டாம் தட்டு ஹீரோக்களும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதுசம்பந்தமாக அப்படங்களின் டைரக்டர்களும், படாதிபதிகளும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கும்போது, படத்தில் நடிக்கும் ஹீரோவைப்பற்றி முதலில் கேட்கும் தமன்னா, வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பட்சத்தில், நான் வளர்ந்து விட்ட நடிகை, அதனால் இப்போது அவருடன் ஜோடி சேர்ந்தால், எனது மார்க்கெட் இறங்கிவிட்டதாக தப்புக்கணக்கு போட்டு விடுவார்கள்.

இதனால் எனது மவுசு குறைவதோடு, சம்பளமும் தடாலடியாக இறங்கி விடும். அதனால், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்து என்னை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை என்று ஓப்பன் ஸ்டேட்மென்டே கொடுக்கிறாராம் தமன்னா.

இதனால் டென்சன் ஆகும் படாதிபதிகள், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி டயலாக் பேசிக்கொண்டிருப்பார் என்று பார்ப்போமே. அடுத்தபடியாக யாரும் கமிட் பண்ணவில்லை என்றால், அவரே நமக்கு போன் போட்டு சான்ஸ் கேட்பார். வெயிட் அண்ட் சீ என்று தமன்னாவே இறங்கி வரும் நாளுக்காக காத்திருக்கிறார்களாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments