4th of January 2014
சென்னை::விஜய், சூர்யா போன்ற மெகா நடிகர்கள் கைவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது? யாரை வைத்து படம பண்ணுவது? என்று திசை தெரியாமல நின்று கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு திசைக்காட்டி கருவி போல வந்தவர்தான் சிம்பு. தான் வாலு, வேட்டைமன்னன் உள்பட 3 படங்களில நடித்து வந்தபோதும், அவரது நிலைமையை அறிந்து உடனடியாக கால்சீட்டை அள்ளிக்கொடுத்தார் சிம்பு.
அதனால், கொஞ்சம் தாமதித்தால் அவரும் மனசு மாறி விடக்கூடும் என்று யோசிக்கவே விடாமல் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கிய கெளதம்மேனன், அப்படத்தில் நடிப்பதற்கு சமந்தா, த்ரிஷா போன்ற நடிகைகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், மும்பையிலிருந்து பல்லவி ஷர்தா என்ற அழகியை சிம்புவுக்கு ஜோடியாக்கினார்.
இந்நிலையில்,சிம்பு நடிக்கும் படத்தை கிட்டத்தட்ட இப்போது நெருக்கி விட்டவர், அடுத்தபடியாக பிப்ரவரியில் அஜீத் நடிக்கும் புதிய படத்தையும் தொடங்குகிறார். ஆனால், முதல் படத்தில் ஏதோ தடுமாற்றத்தில் தங்களை மறந்து விட்டார் கெளதம் என்று நினைத்திருந்த சமந்தா, த்ரிஷா இருவரும் அடுத்த படத்துக்கு தங்களை அவர் அழைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளார்களாம்.
ஆனால், கெளதம்மேனனோ, சிம்பு படத்துக்கு புக் பண்ணியுள்ள பல்லவியையே அடுத்து அஜீத்தை இயக்கும் படத்துக்கும் புக் பண்ணி வைத்திருக்கிறார். இந்த செய்தியை இதுவரை கமுக்கமாகவே வைத்திருந்தார். ஆனால், இப்போது சமந்தா எப்படியோ கெளதம்மேனன் யூனிட்டில் இருப்பவர்கள் மூலம் தெரிந்து விட்டாராம்.
அதையடுத்து, இனிமேல் கெளதம்மேனனை நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பவர், அவர் படத்துக்காக சில மாதங்களாக எந்த படத்துக்கும் கால்சீட் கொடுக்காமல் காத்திருந்த என்னை இப்படி கவிழத்து விட்டாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் சமந்தா.
இதேபோலவே த்ரிஷாவும், சிம்பு படத்துக்கு மறந்து விட்டவர், மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை தனக்கு தருவார் என்று எதிர்பார்த்தவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதனால், அவரும் சமந்தாவை போலவே, மும்பை நடிகை குறுக்கால புகுந்து வாய்ப்பை தட்டிப்பறித்து விட்டாரே என்று புலம்பிக்கொண்டு திரிகிறாராம்.

Comments
Post a Comment