'ஜில்லா' பட போஸ்டர்களுக்கு தடை? : கலக்கத்தில் விஜய்!!!

4th of January 2014
சென்னை::
துப்பாக்கி, தலைவா என்று தொடர்ந்து இரண்டு படங்களுக்கு பெரும் பிரச்சனைகளை சந்தித்த விஜய், தற்போது தனது நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகும் 'ஜில்லா' படத்திற்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஜில்லா படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகளும் யு சான்றிதழ் வழங்கினார்கள். நினைத்தது போலவே அனைத்தும் சுமூகமாகப் போக மகிழ்ச்சியில் இருந்த விஜய், தற்போது கலக்கம் அடைந்திருக்கிறார். காரணம், ஜில்லா படத்தின் பேனர்களை வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் ஜில்லா படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பேனர்கள் வைத்துள்ளார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக 'ஜில்லா' பட பேனர்களை அகற்றச் சொல்லிவிட்டு, இனி இந்த ஏரியவுல பேனர்கள் எதுவும் வைக்கக் கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து, விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரிக்கு தகவல் கூறபட்டதாம். மறுபடியுமா...!, அதிர்ந்திபோயிருக்கும் விஜய், தற்போது மீண்டும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments