28th of January 2014
சென்னை::கவர்ச்சியாக நடிக்க தயங்கி வந்த பிரணிதா துணிச்சலான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழில் ‘சகுனி படத் தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு கல ராக இருந்தாலும் அவர்களைப்போல் வரவேற்பு இல்லாததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். அங்கும் பெரிய அளவில் வரவேற்பில்லாமல் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே படங்களில் நடித்து வந்தார். என்னதான் நடித்தாலும் கமர்ஷியல் பாணிக்கு ஏற்ப கவர்ச்சி காட்டாவிட்டால் சக ஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாது என்று நலவிரும்பிகள் அவரிடம் கூறினார்கள். அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு தெலுங்கில் பவன் கல்யாண் உடன் நடித்த ‘அத்தரின்டிக்கி தாரிடி படத்தில் 2வது ஹீரோயினாக நடித்த அவரது வேடம் பேசப்பட்டது.
எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் வந்ததையடுத்து கவர்ச்சி போட்டிக்கு துணிந்துவிட்டார். இதை வார்த்தை ஜாலமாக சொல்லாமல் செயல் மூலம் காட்டி இருக்கிறார். சமீபத்தில் ஸ்பெஷல் போட்டோகிராபரை அமர்த்தி படுகவர்ச்சி படங்கள் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். நீச்சல் உடையில் வித்தியாசமான போஸ்களில் அவரது படம் வெளியாகி உள்ளது. கவர்ச்சி போட்டிக்கு தயாராகிவிட்ட பிரணிதாவுக்கு வாய்ப்புகள் வந்து கொட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment