ஷூட்டிங் பர்மிஷனுக்காக தாதாவை நேரில் சந்தித்த சந்தானம்!

15th of January 2014
சென்னை::தாதாவை நேரில் சந்தித்து ஷூட்டிங் பர்மிஷன் கேட்ட சந்தானத்துக்கு கண்டிஷன் போடப்பட்டது.வடிவேலு, விவேக், சந்தானம் என காமெடி நடிகர்கள் ஹீரோக்களுக்கு நண்பர்களாக நடிக்கும்போது அவ்வப்போது தாதாக்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவதுபோல் காட்சிகள் வருவதுண்டு.
 
அந்த அனுபவத்தை நிஜத்தில் பெற்றார் சந்தானம். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் டைரக்டு செய்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங்கிற்காக கடப்பாவுக்கு பட குழு சென்றது. அப்பகுதியில் ஷூட்டிங் நடத்த வேண்டுமென்றால் உள்ளூர் தாதாவின் அனுமதி பெற்றால்தான் முடியும் என்று கூறிவிட்டனர். பிறகு சந்தானம் தானே அந்த ரிஸ்க்கை எடுப்பதாக கூறி தாதாவை அவரது வீட்டில் சந்தித்து அனுமதிகேட்டார்.
 
அவரிடம் தாதா, ‘பர்மிஷன் தரணும்னா ஒரு கண்டிஷன்‘ என்றார். ‘என்னன்னு சொல்லுங்க‘ என சந்தானமும் பயத்துடன் கேட்டார். ‘ஷூட்டிங் முடிந்து பட குழுவினர் ஊர் திரும்புவதற்கு முன் என் வீட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். என்னுடன் அமர்ந்து சாப்பிட்ட பிறகுதான் செல்ல வேண்டும்‘ என்று காமெடி பீஸ் பாணியில் தாதாபோட்ட கண்டிஷனை கேட்டு மனதுக்குள் சிரித்த சந்தானம்,‘எங்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் உங்களுக்காக வர்ரோம்‘ என்று பிகுகாட்டிக்கொண்டு புறப்பட்டார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments