11th of January 2014
சென்னை::சிங்கம் 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு
சூர்யா லிங்குசாமி இயக்கிவரும் புதிய படமொன்றில் பிஸியாக
நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20ஆம் தேதி மும்பையில் ஆரம்பித்து
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்
தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சமந்தா
இப்படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படத்தின் கதை மும்பையை சுற்றியே நகர்வதால், மும்பை நாயகி ஒருவரை பாடல்
ஒன்றிற்கு நடனமாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று சனாகானை
அணுகியிருக்கிறார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். இந்நிலையில்தான்
அந்தப் பாடலுக்கு சோனாக்ஷி சின்கா குத்து டான்ஸ் ஆட உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. ”யுவன் ஷங்கர் ராஜா” இசையில் ரஞ்சித்தின் குரலில்
தயாராகியுள்ள இந்தப்பாடலுக்கு ”ராஜுசுந்தரம்” வித்தியாசமான முறையில் நடனம்
அமைக்கிறாராம்.
சமீபத்தில் சோனாக்ஷியை சந்தித்த இயக்குநர் ”லிங்குசாமி”, அவரிடம்
பாடலுக்கான சூழலை விளக்கி கால்ஷீட்டை வாங்கியுள்ளார். இந்தப் பாடல் காட்சி,
அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெரும் போது படமாக உள்ளது.
சோனாக்ஷி நடிக்க ஒப்புக்கொண்டாலும், இன்னும் ஒப்பந்தத்தில்
கையெழுத்திடவில்லை என்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. தொடர்ந்து
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அங்கு,
சூர்யா, சமந்தா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த
இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த
திட்டமிட்டு இருக்கிறார்கள்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு
செய்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வருகிற பொங்கல்
தினத்தன்று வெளியாகலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
Comments
Post a Comment