12th of January 2014
சென்னை::ஜில்லா’ படத்தில் இடம் பெற்ற `மாமா…மாமா…ட்ரீட்டு…’ என்ற பாடல் நேற்று முதல் நீக்கப்பட்டு விட்டது.
சென்னை::ஜில்லா’ படத்தில் இடம் பெற்ற `மாமா…மாமா…ட்ரீட்டு…’ என்ற பாடல் நேற்று முதல் நீக்கப்பட்டு விட்டது.
ஆனால், படத்தின் இசை வெளியான போதே அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது.
ஒரு `ஃபாஸ்ட பீட்’ பாடலாகவும் இன்றைய இளம் ரசிகர்களைக் கவரும் விதத்திலும் இருந்த அந்த பாடல் நீக்கப்பட்டதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பல ஊர்களில், பல திரையரங்குகளில் அந்த பாடல் இடம் பெற வேண்டும் என ரசிகர்கள் ரகளை செய்ததாக தகவல்கள் வெளியானது.
அதைத் தொடர்நது நீக்கப்பட்ட அந்த பாடலை மீண்டும் சேர்க்க படக்குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள்.
படத்தில் தேவையற்ற பல காட்சிகள் இருக்கும் போது விஜய்யின் அட்டகாசமான நடனத்துடன் கூடிய ஹிட் பாடலை நீக்கியது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
விரைவில் படத்தில் அந்த `மாமா..மாமா..’ ஒலிக்கும்…
Comments
Post a Comment