22nd of January 2014
சென்னை::மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு படத்தில் நடித்தவர்
இஷாதல்வார். மும்பை இறக்குமதியான இவரது நடிப்பு அந்த படத்தில் எடுபடவில்லை
என்பதால், அதன்பிறகு கோலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை.
ஆனால், அவர் எதிர்பார்த்தது போன்று இளவட்ட
ஹீரோக்களின் படங்கள் எதுவும் அவருக்கு சிக்கவில்லை. அதனால் நரை முடி
ஹீரோக்களான மம்மூட்டி, ஜெயராம் போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்காக சில
இயக்குனர்கள் வா வா என்று அழைத்துக்கொண்டிருந்ததால், வேறு வழியில்லாமல்
அந்த படங்களில் கமிட்டாகி விட்டார் இஷாதல்வார்.
மம்மூட்டியுடன்
பால்யசகி, ஜெயராமுடன் உற்சாக கமிட்டி ஆகிய படங்களில நடிக்கும் இஷாவுக்கு
அவர்களுடன் டூயட் எல்லாம் கூட உள்ளதாம். இதனால் அடுத்தபடியாக இளவட்ட
ஹீரோக்களுக்கு ஜோடி சேர முடியாத என்ற நிலையும் உருவாகியிருக்கிறதாம்.
அதனால், இதேபோல் அங்குள்ள சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க மேலும் படவேட்டை
நடத்தி வரும் நடிகை, தமிழ், தெலுங்கில் வாங்குவது போனறு பெரிய சம்பளமும்
கேட்கிறாராம். அப்பா வயது நடிகர்களுடன் அம்மணி எந்த தயக்கமும் காட்டாமல்
நடிப்பதால், அவர் கேட்கிற சம்பளத்தை வாரிக்கொடுக்கிறார்களாம் கேரள
படாதிபதிகள்.
ஏற்கனவே
மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்த இஷா, அந்த தொடர்பை
வைத்துக்கொண்டு மறுபடியும் கேரளாவில் முகாமிட்டு சீரியசாக படவேட்டை
நடத்தினார்.
Comments
Post a Comment