6th of January 2014
சென்னை::அருண்விஜய் நடித்து வெளிவந்த ‘தடையற தாக்க’ திரைப்படம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பினைப் பெற்றது. அதனால் தான் அடுத்து மீண்டும் ஒரு வெற்றிக்காக, தற்போது அவர் நடித்துவரும் ‘டீல்’ படத்தை நிறுத்தி நிதானமாக எடுத்து வருகிறார்கள்.

தற்போது இந்தப்படத்திற்கு ‘வா’ என பெயர் மாற்றிவைத்து கேப்ஷனாக ‘டீல்’ என்ற வார்த்தையை வைத்துவிட்டார்கள்.எல்லாம் கேளிக்கை வரி பிரச்சனைக்காத்தான். தலைப்பு தமிழில் இல்லை என்பதால் ரிலீஸ் நேரத்தில் வரும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இப்போதே பெயரை மாற்றிவிட்டோம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
இந்தப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ராதா மகள் கார்த்திகா நடிக்கிறார். சுகுமாரன் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்ய தமன் இசை அமைத்திருக்கிறார். சிவஞானம் என்பவர் படத்தை இயக்குகிறார்.
Comments
Post a Comment