27th of January 2014
சென்னை::கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கிடையே தற்போது பத்தி எரிந்து வரும் ஒரே விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான். இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.
அதனால், விஜய் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில், அவரது அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போன்று, அஜீத் வட்டாரத்திலும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ, எங்கள் தலைவர் ஒருவரே சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் ஒரு பக்கம் கொடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தை தயாரிப்பவர்கள் செளத் சூப்பர் ஸ்டார் என்று சூர்யாவுக்கு பட்டம் சூட்டியிருக்கிறார்களாம். இதனால் தள்ளுமுள்ளுவில் இருக்கும் அத்தனை பேரும் இதென்ன புது கலாட்டாவாக இருக்கு என்று அஞ்சானை ஆத்திரத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.
இதற்கிடையே, சின்ன வயதில் நடித்தபோது லிட்டில் சூப்பர் ஸ்டார். பின்னர் இளைஞனானபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குததானே பட்டம் சூட்டிக்கொண்டு வரும் சிம்பு, அப்படின்னா நான் என்ன ஸ்டாரு என்று கேட்டுக்கெண்டு நிற்கிறாராம்.
ஆக, கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை முன்வைத்து ஒரு களோபரமே நடந்து கொண்டிருக்கிறது .

Comments
Post a Comment