என் குணத்துக்கு நேர்மாறானவர் சைந்தவி: ஜி.வி.பிரகாஷ்!!!

6th of January 2014
சென்னை::என் குணத்துக்கு நேர்மாறானவர் என் மனைவி சைந்தவி என்றார் ஜி.வி.பிரகாஷ்குமார். ‘வெயில்‘ பட இசை அமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது பென்சில் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது:
 
என் மனைவி சைந்தவிக்கு  சமீபத்தில் வந்த அவரது பிறந்த நாளுக்கு பரிசாக என்ன தந்தீர்கள் என்கிறார்கள். என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து அவருக்கு வாழ்த்து  சொன்னேன். என் வாழ்நாள் முழுவதும் நீ என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினேன். எங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன  என்று சிலர் கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் பணியை சரிவர செய்வதுதான் அதற்கு காரணம்.
 
சைந்தவி ரொம்பவும் அமைதியானவர்.  சொல்லப்போனால் என் குணத்துக்கு நேர்மாறானவர். ஆனாலும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வோம்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments