30th of January 2014சென்னை::டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்று பிறகு, வெள்ளித்திரையில், காக்க
காக்க, காதல் கொண்டேன் ஆகியப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த
டேனியல் பாலாஜி, பொல்லாதவன், வேட்டையாடு விளையாட்டு ஆகியப் படங்களில்
பிரமிப்பூட்டும் வில்லன் நடிகராக அவதாரம் எடுத்தார்.
பிறகு, ஹீரோ அவதாரம் எடுத்த அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த ஞானகிறுக்கன் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், டேனியல் பாலாஜி, இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். ஆம், டேனியல் பாலாஜி படம் ஒன்றை இயக்குகிறார். அப்படத்திற்கு 'குறோணி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் இப்படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ::

Comments
Post a Comment