3rd of January 2014
சென்னை::மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சரண் - பரத்வாஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
'காதல் மன்னன்', ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, 'அட்டகாசம்' என பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சரண். கடைசியாக இவர், அஜீத்தை வைத்து ‘அசல்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில் சரண் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றை தயாரித்து இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வினய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமுத்திரிகா, சுவாசிகா, கேஷா என மூன்று புதுமுக நாயகிகள் அறிமுகமாக இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு (3-1-14) ஐதராபாத்தில் துவங்கவிருக்கிறது. படத்திற்கு கிருஷண ரமணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சரணுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற இருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

Comments
Post a Comment