மகனுக்கே தாத்தாவாக நடிக்கும் நாசர்!!!

28th of January 2014சென்னை::இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் படங்களில் நாசருக்கு எப்போதுமே பொருத்தமான ஒரு கதாபாத்திரம் இருக்கும். காரணம் விஜய், அவருடைய தீவிர ரசிகர் என்பதால் மட்டுமல்ல அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர் என்பதுதான்.
 
தற்போது ‘தெய்வத்திருமகள்’ சாராவை மையமாக வைத்து அவர் இயக்கிவரும் ‘சைவம்’ படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய். அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க ஓர் இளைஞனை தேடியபோது நாசரின் மகன் லுப்துபுதீன் கண்ணில் பட்டார்.
 
கதாபாத்திரத்திற்கும் அவர் பொருத்தமாக இருக்கவே அவரையே ஒப்பந்தம் செய்து ‘பாஷா’ என பெயரும் வைத்துவிட்டார் விஜய். “அவரை காமெராவில் பார்த்த போது ‘நாயகன்’ நாசரை நினைவுபடுத்தினார்” என்கிறார் இயக்குனர் விஜய்.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments