19th of January 2014
சென்னை::வீரம் படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் எகிறப்போகிறது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தார் தமன்னா. ஆனால், அவர் எதிர்பார்த்த எந்த இயக்குனர்களிடமிருந்தும் அழைப்பு வரவில்லையாம். மாறாக, சில சிறிய பட்ஜெட் கம்பெனிகள்தான் தொடர்பு கொண்டார்களாம். இதனால், நடித்த படம் ஹிட்டானபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்று அதிர்ச்சியாகி விட்டாராம் தமன்னா.
இந்தநிலையில், தமன்னா இனி கிளாமராக நடிக்க மாட்டார் என்று கோலிவுட்டில் வேகமாக பரவிக்கொண்டிருந்த ஒரு செய்தி, அவரது காதுகளிலும் பாய்ந்திருக்கிறது. என்னடா இது புதுக்கதையா இருக்கு என்று அவர் அதுபற்றி தனது சகாக்கள் மூலம் விசாரித்தபோது, வீரம் படத்தில் ஹோம்லியாக நடித்த தமன்னா, இனிமேலும் அந்த ரூட்டைத்தான் பின்பற்றப்போகிறாராம் என்று யாரோ சிலர் பேசிக்கொணட செய்திதான் இப்படி ரெக்கை முளைத்து பரவியிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, புதிய படங்கள் தன்னை தேடி வராததற்கு இந்த தவறான செய்திதான் காரணம் என்பதை புரிந்து கொண்ட தமன்னா, இப்போது தனது பட்டியலில் இருக்கும் சில மெகா பட்ஜெட் டைரக்டர்களை அவசர அவசரமாக சந்தித்து, இந்த தமன்னாவையும் கிளாமரையும் யாராலும் பிரிக்க முடியாது. தமன்னா என்றாலே எப்போதுமே கிளாமர் குயின்தான். அதனால், யாரோ பரப்பிவிட்ட வதந்தியை நம்பி அவசர முடிவு எடுத்து விடாதீர்கள். கிளாமரில் நான் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று தனது நிலையை விளக்கி வருகிறார் தமன்னா.
தமன்னாவின் இந்த அவசர சந்திப்பு, கோலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளை அலற வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments
Post a Comment