22nd of January 2014
சென்னை::வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்தி நடிகை
சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில்
நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
அதனால் வாடிய முகத்துடன் மீண்டும் மும்பைக்கே திரும்பினார். இந்தநிலையில்
அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் அப்போது அதனை மறுத்தார் சமீரா.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சமீராவுக்கும், தொழில் அதிபரும், மோட்டார் பைக் நிறுவன அதிபருமான அக்ஷய் வர்தாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் திருமணம் ஏப்ரலில் நடக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது திடீர் திருப்பமாக நேற்று (ஜனவரி 21ம் தேதியே) அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சமீராவின் தாயார் உறுதிபடுத்தியுள்ளார். மும்பையில் நேற்று
மாலை நடக்க இருக்கும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் கலந்து கொள்கின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்வதாக அறிவித்துவிட்டு, இப்போது திடீரென சமீரா இன்று திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதற்கான காரணம் தெரியவில்லை..::

Comments
Post a Comment