2nd of January 2014
சென்னை::டெல்லியில் ஆட்சியை கைபற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா அல்லது வதந்தியோ, இந்த தகவலினால் தற்போது கோடம்பாக்கம் பெரும் பரபரப்படைந்துள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் அக்கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடக்கிறது. நடிகர் விஷாலையும் இக்கட்சிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக பேசப்படுகிறது. விஷால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தால் அவருக்கு தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் விஷால் தரப்பில் இது உறுதிபடுத்தப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தலைவராக போகிறார் என்பது வதந்திதான் என்கின்றனர். இணைய தளங்களில் யாரோ இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.
அன்னா ஹசாரே ஊழலை எதிர்த்து நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தவர் நடிகர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment