24th of January 2014சென்னை::ஒரு முறை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிகினிக் போகிறீர்கள். டூரும் ஜாலியாக போகிறது. உடனே அடுத்த வருடமும் அதே டீமுடன் டூர் பிக்ஸ் பண்ணுவீர்களா இல்லையா. அதையேதான் ‘இது கதிர்வேலன் காதல்’ படக்குழுவினரும் செய்ய இருக்கிறார்கள்.
இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘நண்பேன்டா’. இந்தப்படத்தை இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெகதீஷ் என்பவர் இயக்குகிறார்.
உதயநிதியுடன் நயன்தாரா, சந்தானம், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என ‘இது கதிர்வேலன் காதல்’ பட கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. முந்தைய படத்தில் வேலைபார்த்தபோது இவர்களுக்குள் ஏற்பட்ட புரிதல் தான் இவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்க காரணமாக அமைந்துள்ளது.::
Comments
Post a Comment