18th of January 2014
சென்னை::விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த முதல் படம் துப்பாக்கி. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் ஒரு ராணுவ வீரன், நாட்டுக்குள் நடக்கும் தீவிரவாத்தை ஒழிப்பது போன்று கதையை உருவாக்கியிருந்தார் முருகதாஸ். விஜய்யை வித்தியாசமான ஆக்சன் கெட்டப்பில் நடிக்க வைத்த அவர், கதையையும் வித்தியாசமான கோணத்தில் சொன்னதால் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
ஆனால், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சிலர் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்பிறகு வெளியான அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால், அப்போதே மீண்டும் விஜய்யும், முருகதாசும் இணைவதற்கான ஒப்பந்தமும் உறுதியானது. ஆனால், விஜய் அதற்குள் தலைவா, ஜில்லா போன்ற படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்ததால், அந்த இடைவெளியில் இந்தி படத்தை இயக்கி விட்டு வருவதாக மும்பைக்கு சென்று விட்டார் முருகதாஸ்.
இந்நிலையில், இந்திப்பட வேலைகளை முடித்து விட்டு தற்போது கோலிவுட்டுக்கு வந்து விட்ட ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் படத்துக்கான கதையை ரெடி பண்ணி விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தலைப்பு மட்டும் இன்னும் முடிவாகவில்லை. அதுபற்றி யோசித்து வருகிறேன் என்று கூறும் அவர், துப்பாக்கி படத்துக்கு பிறகு நானும், விஜய்யும் இணையும் படம் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், துப்பாக்கியை மிஞ்சும் அதிரடியான படமாக அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன் என்கிறார்.

Comments
Post a Comment