28th of January 2014சென்னை::இரண்டு வருடங்களுக்கு முன் ‘வித்தகன்’ படத்தை இயக்கிய பார்த்திபன் இந்தமுறை வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயரே ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்பதுதான். கூடவே A Film without a story என்றும் தனது வழக்கமான பாணியில் கேப்ஷன் வைத்துள்ளார் பார்த்திபன்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர விஜய்சேதுபதி ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன்” என்கிறார் பார்த்திபன்.
Comments
Post a Comment