என்னைப்பற்றி தவறாக கொளுத்திப்போட்டுள்ளார் அனுஷ்கா: தமன்னா ஆவேசம்!!!

18th of January 2014
சென்னை
::செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள தமன்னாவுக்கு, அஜீத்துடன் அவர் நடித்த வீரம் ஹிட்டாக அமைந்ததால் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதனால், நயன்தாராவைப்போன்று தானும் இந்த ரவுண்டில் அதிக படங்களை கைப்பற்றி பிசியாகி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார் தமன்னா.

இந்தநேரத்தில், தமிழ், தெலுங்கில் தயாராகும் ராஜமவுலியின் பாகுபாலி படத்தில் நான்தான் முக்கிய கதாநாயகி, தமன்னாவுக்கு சிறிய வேடம்தான் என்று தன்னைப்பற்றி தவறான செய்தியை கொளுத்திப்போட்டுள்ள அனுஷ்காவினால் கடும ஆவேசமடைந்திருக்கிறார் தமன்னா. காரணம், தமன்னா சான்ஸ் கேட்டு செல்லும் இடங்களில் பாகுபாலியில் சிறிய கேரக்டரில் நடிக்கிறீர்களாமே? என்றுதான் முதல் கேள்வியே கேட்கிறார்களாம். இந்த கேள்வி தமன்னாவுக்கு பெரிய டென்சனை கொடுக்கிறதாம்.

இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், பாகுபாலியில் நானும் ஒரு ஹீரோயினாகத்தான் நடிக்கிறேன். அப்பட நாயகன் பிரபாசுக்கு ஜோடி அனுஷ்காதான் என்றாலும், எனது கேரக்டர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் ஏற்றுக்கொண்டேன். தமிழில் அஜீத்துடன் வீரம் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் எனக்கு இந்தியிலும் படங்கள் உள்ளது. அதனால், இந்த நேரத்தில் துக்கடா வேடத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படவில்லை என்று தனதுதரப்பில் கூறுகிறாராம்.

இப்படி தமன்னா ஆந்திரவாலாக்களை தெளிவுபடுத்தியபோதும், புதிய படங்கள் இன்னும் அவருக்கு புக்காகவில்லையாம். அதனால், என்னைப்பற்றி அனுஷ்கா கொளுத்திப்போட்ட வதந்திதான் இப்படி ஓரங்கட்ட செய்து விட்டது என்று தனது அபிமானிகளிடம் சொல்லி கொந்தளித்துக் கொண்டிருக்கிறாராம் தமன்னா.
tamil matrimony_HOME_468x60.gif

Comments