21st of January 2014சென்னை::த்ரிஷா, ராணா காதல் முறிந்துவிட்டதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு முன்னணி நடிகர் ராணாவுடன் இணைத்து த்ரிஷா சிறிதுகாலம்
கிசுகிசுக்கப்பட்டார். அவரும் ராணாவுடன் ஒன்றாக சினிமா நிகழ்ச்சிகளுக்கு
வருவது, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர்களுக்கிடையில் பெரும் இடைவெளி ஏற்பட்டதாக தெரிகிறது.
என்றென்றும் புன்னகை படத்திற்கு பின்னர் த்ரிஷாவிடம் மாற்றம் தெரிவதாகவும்,
அவர் அடிக்கடி அந்த படத்தில் நடித்த ஒரு நடிகருடன் போனில் மணிக்கணக்கில்
பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம்
ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணா, அனுஷ்காவுடன் நெருங்கி
பழகி வருவதாகவும், இந்த இடைவெளிக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தெலுங்கு
படவுலகில் பேசப்பட்டு வருகிறது.
அனுஷ்காவும் ராணாவும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தப்
படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது.
Comments
Post a Comment