மாணவிகளுடன் கோலப்போட்டியில் கலந்துகொண்ட நமீதா – ரத்த தானம் செய்யவும் வலியுறுத்தினார்!!!

14th of January 2014
சென்னை::சென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology இல் பொறியியல் மாணவ மாணவியருடன் பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நமீதா. இந்த விழாவில் மாணவியரின் நடன நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா திடீரென மேடையில் ஏறி அவர்களுடன் தானும் நடனமாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
 
விழாவில் கோலப்போட்டி நடந்தது, நமீதாவும் கோலம் போட்டு மகிழ்ந்தார். மாணவியர் வைத்த பொங்கலை ருசிபார்த்து சிறப்பாகப் பொங்கல் வைத்தவரிடம் எப்படி இவ்வளவு சுவையாக வைத்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். உறியடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு உறியடித்தார்.
விழாவில் ரத்த தானத்தை வலியுறுத்திப்பேசிய நமீதா தன்னை சந்தித்துப் பேச விரும்புபவர்கள் தாங்கள் ரத்த தானம் செய்ததற்கான சான்றிதழுடன் வந்தால் அவர்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறி மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
சொல்லப்போனால் வழக்கமாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல், மிகவும் சகஜமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பழகியது போன்ற திருப்தி ஏற்பட்டதாக கூறியுள்ளார் நமீதா. இந்த பொங்கல் விழா நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுள் ஒன்றாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments