கவர்ச்சி நடிகை ஷகீலாவின் சுயசரிதை புத்தகத்தின் பரபரப்புத் தகவல்கள்!!!

12th of January 2014
சென்னை::கவர்ச்சி நடிகை ஷகீலா தான் எழுதியுள்ள ஆலிவ் புக்ஸ் என்ற சுயசரித்திர புத்தகம் தனது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று ஷகீலா தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தில் பிரபல நடிகை ஒருவரின் தம்பி தன்னை சீரியஸாக காதலித்ததாகவும், ஆனால் திடீரென பாதியிலேயே தன்னைக் கைகழுவி விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா.

தான் எழுதியுள்ள சுயசரிதையி்தான் இப்படிச் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகைக் கலக்கியவர் ஷகீலா. இன்று அவர் ஒதுங்கி விட்டார். இதனால் அங்கு பிற மலையாளத் திரைப்படங்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சின்னச் சின்ன காமெடி வேடங்களில் நடித்து வரும் ஷகீலா, தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார். ஆலிவ் புக்ஸ் வெளியிட்டுள்ள அந்த நூலில் பல சுவாரஸ்யத் தகவல்களைக் கூறியுள்ளார்.
ஷகீலா தனக்கு ரொம்பப் பிடித்த ஹீரோ திலீப் என்று கூறியுள்ளார்.

 திலீப் மலையாள நடிகர் ஆவார். அங்குள்ள மும்மூர்த்திகளான மம்முட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரில், திலீப்பும் செல்வாக்கு படைத்த நபர்.
திலீப்புடன் இணைந்து நடிக்க ரொம்ப ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார் ஷகீலா. அவரது ஏதாவது ஒரு படத்திலாவது இணைந்து விட வேண்டும் என்று எப்போதுமே ஆசைப்பட்டாராம். ஆனால் அது நடக்கவே இல்லையாம். திலீப்புடன் ஒரு படத்தில் ஏதாவது காமெடி சீனிலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் அவரது இப்போதைய ஆசையாம்.
தனது சுயசரிதையில் தனது நிறைவேறாத காதல் குறித்தும் சொல்லியுள்ளார் ஷகீலா. பிரபல நடிகையின் தம்பி ஒருவர் தன்னுடன் சீரியஸான உறவு வைத்திருந்ததாகவும், ஆனால் பாதியிலேயே தன்னைக் கைவிட்டு விட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார் ஷகீலா. இந்த சோகத்திலிருந்து தான் மீள ரொம்ப நாட்களாகியிற்று என்றும் வேதனை தெரிவித்துள்ளார் ஷகீலா.

தனது நூலில் இப்படி பல விஷயங்களை அவர் தனது ரசிகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் ஷகீலா படம் வெளியாகிறது என்றால் கேரளாவில் வேறு நடிகர்களின் படங்களைத் திரையிடவே முடியாத அளவுக்கு ரசிகர்கள், ஷகீலா பட தியேட்டர்களை மொய்த்துக் குவிந்தனர். சூப்பர் ஸ்டார் நடிகர்களே பயந்து போகும் அளவுக்கு ஷகீலா அலை பலமாக வீசிய காலம் அது.
ஷகீலாவின் படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்த மோகத்தால் தங்களது படங்கள் ஓடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் முக்கிய நடிகர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஷகீலாவை ஒதுக்கி வைத்தார்கள் என்று கூட அப்போது பேச்சு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments