நாக சைதன்யாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த சமந்தா!!!

22nd of January 2014
சென்னை::சமந்தாவும, நாக சைதன்யாவும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே ‘ஏமாயா கேசவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படம் 2010ஆம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் மூலம்தான் சமந்தா தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். அதில் முத்த காட்சி இடம் பெற்று இருந்தது. நாக சைதன்யாவை முத்தமிட வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும் மறுப்பு சொல்லாமல் நடித்தார்.

ஆனால் தற்போது அதே நாக சைதன்யாவை முத்தமிட சமந்தா மறுத்துவிட்டதால், தெலுங்கு சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாக சைதன்யா கூறும்போது, "ஆட்டோ நகர் சூர்யா படத்தில் முத்த காட்சியில் நடிக்கும்படி சமந்தாவிடம் வபுறுத்தினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்." என்றார்.

நடிகர் சித்தார்த்தை காதலிப்பதால் தான், சமந்தா முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments