அருணாசலேஸ்வரர் கோவிலில் இளைய ராஜா வழிபாடு!!!

11th of January 2014
சென்னை::திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா வழிபாடு மேற்கொண்டார்.

அண்மையில் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இளையராஜா வுக்கு இதய ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை
 
நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி ஸ்டென்ட் என்ற சிகிட்சை அளிக்கப்பட்டது. பூரண குணமடைந்துள்ள இளையராஜா வியாழக் கிழமை திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.

கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் உண்ணாமுலையம்மன் மற்றும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை தரிசித்த அவர் தொடர்ந்து கோவில் நவக்கிரக சன்னதி

யில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டார்.

பின்னர் ரமணாஸ்ரமத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த இளையராஜா பெங்களூரு புறப்பட்டு சென்ஹார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா நெஞ்சுவலிகக்கான சிகிட்சை நல்லபடியாக நடகக்க வேண்டும் என்று அருணாசலேஸ்வரரை வேண்டினேன்.

அவரது அருளால் இப்போது நான் பூரண குணமடைந்துள்ளேன். எனவே  அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்துள்ளேன்.

அமிதாப்பச்சனின் படம் ஒன்றுக்கான இசையமைப்பு பணியை கவனிக்க பெங்களூரு புறப்பட்டுச் செல்கிறேன் என்றார்.


tamil matrimony_HOME_468x60.gif

Comments