அம்மணியின் ஆர்ப்பாட்டம் குறையில்லை: அமலாபால் மீது படாதிபதிகள் அதிருப்தி!!!

15th of January 2014
சென்னை::அமலாபாலை தலைவா தடுக்கி விட்டபோதும், அம்மணியின் ஆர்ப்பாட்டம் குறையில்லை என்கிறார்கள். படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததுமே கேரவனுக்குள் சென்று செல்போன் ஆன் செய்பவர் அதன்பிறகு ஷாட் ரெடியாகி விட்டது என்ற தகவலை சொல்ல உதவி இயக்குனர்கள் வந்து கேரவன் கதவை தட்டினாலும் கண்டுகொள்வதே இல்லையாம். அவரது மொத்த கவனமும் செல்போனிலேயே இருக்கிறதாம்.

இதனால் வாசலிலேயே காத்திருந்து விட்டு பேக் அடிக்கும் உதவி இயக்குனர்கள், விசயத்தை டைரக்டரின் காதுக்கு கொண்டு செல்ல, அவர்கள் வந்து டென்சனை காட்டிய பிறகுதான் கேரவன் கதவையே திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறாராம் அமலாபால். அதன்பிறகும் பெரிதாக பரபரப்பை காட்டாமல் சாவகாசமாகத்தான் கேமரா முன்பு வருகிறாராம். பின்னர் அவருக்கு டயலாக் சொல்லிக்கொடுத்து இரண்டு டேக் எடுப்பதற்குள் லஞ்ச் பிரேக் வந்து விடுகிறதாம்.

இதன்காரணமாக தற்போது மேற்படி நடிகையை வைத்து படம் தயாரிக்கும் படாதிபதிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். தற்போது தான் தயாரிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலை புக் பண்ணியுள்ள தனுஷ்கூட, அடுத்து தான் எதிர்நீச்சல் டீமை வைத்து தயாரிக்கும் படத்திற்கும் அமலாபாலைதான் முதலில் புக் பண்ணுவதாக இருந்தார். ஆனால், வேலையில்லா பட்டதாரிக்கு அவர் சரியானபடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து தான் தயாரிக்கும் படத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டார்.

அதனால், அடுத்து அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு செல்லவிருந்தது. ஆனால், அவர் எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால் இப்போது ஸ்ரீதிவ்யாவை மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜேடியாக்குகிறார்கள். ஆக, அமலாபாலின் அட்டகாசத்தினால் அவரது படவாய்ப்புகளை இப்போது ஸ்ரீதிவ்யாவுக்கு சென்று விட்டது போல், ஏற்கனவே ஒரு வாய்ப்பு நஸ்ரியாவுக்கும் சென்றிருந்தது. இதுபோன்று படவாய்ப்புகள் நழுவிப்போனபோதும் அமலாவின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லையாம்.

இதையடுத்து, ஜெயம்ரவியுடன் நடித்துள்ள நிமிர்ந்து நில் படம் இருப்பதால் அதை முன்வைத்து ஜாஸ்தியாகவே பேசி வருகிறாராம். அதனால், அவருக்கான மேலும் சில வாய்ப்புகள்கூட லட்சுமிமேனன் உள்ளிட்ட நடிகைகள் பக்கம் தாவிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அமலாபால் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் கோலிவுட் படாதிபதிகள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments