1st of January 2014
சென்னை::ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது பாலிவுட்டில் பரபரப்பு நடிகையாகி விட்டார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும், துணிச்சலாக நடித்து வரும் அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளும் திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ருதக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மறுபடியும் வரும் ஆசையும் மனதளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இந்த நேரத்தில், அவரைத்தேடிச்செல்லும் சில மெகா படங்களை அவரது மேனேஜர் ஒருவர், ஸ்ருதிக்கு தெரியாமலேயே அந்த வாய்ப்புகளை வேறு நடிகைகளுக்கு திருப்பி விட்டு வந்தாராம். ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் நடிக்க ஸ்ருதியை கேட்டபோதுகூட, அவர் இந்தியில் பிசி என்று சொல்லி வேறு ஒரு நடிகைக்குத்தான் அவர் சிபாரிசு செய்தாராம். ஆனால், அதற்கு ஆர்யா மசியவில்லை. அதனால் டாப்சியை கூட்டு சேர்த்து விட்டார்.
இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஸ்ருதி ஒப்பந்தமான பிறகுதான், இது மேனேஜர் செய்த கோல்மால் என்பது ஆர்யாவுக்கே தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து, உடனடியாக அந்த மேனேஜரை நீக்கி விட்ட ஸ்ருதிஹாசன், இனி பட விசயமாக தானே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

Comments
Post a Comment