பிப்ரவரி-6 ஆம் தேதி அஜித் படம் துவக்கம்!!!

27th of January 2014
சென்னை::பொங்கல் தினத்தில் வெளியான ‘வீரம்’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் அஜித், இந்த சந்தோஷத்தோடு தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் ஆரம்பிக்க இருக்கிறார்.
 
இந்தப்படத்திற்கான துவக்கவிழா பூஜை வரும் பிப்ரவரி-6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தை கௌதம் மேனன் தான் இயக்குகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஏ.எம்.ரத்னம் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
 
தற்போது சிம்புவை வைத்து இரவு பகலாக முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவரும் கௌதம் மேனன், கிட்டத்தட்ட இதன் படப்படிப்பை முடித்துவிட்டார். ஏற்கனவே ஒருமுறை தன் கைவசம் வந்து நழுவிப்போன அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைத்திருப்பதால் தற்போது உற்சாகத்தில் இருக்கும் கௌதம், “இந்தப்படம் ஒரு ஸ்டைலிஷான மாஸ் எண்டெர்டெயின்மெண்ட் விருந்தாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments