24th of January 2014சென்னை::சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என தொடர் வெற்றிகளாக குவித்துவரும் விஜய் சேதுபதிக்கு அடுத்து ரிலீஸாக இருக்கும் படம் ‘ரம்மி’. பலமுறை இந்தப்படத்தின் ரிலீஸ் தேதிகள் மாற்றி வைக்கப்பட்ட நிலையில் இப்போது இறுதியாக வரும் ஜனவரி-31ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.
இந்தப்படத்தை கே.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் இனிகோ பிரபாகர், பரோட்டா சூரி இருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்திலும் இவர்கள் மூவரும் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே விஜய்சேதுபதி நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றிவாகை சூடிவருகின்றன. அந்தவகையில் ‘ரம்மி’ படத்திற்கு அவரது முந்தைய படங்களைவிட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.::
Comments
Post a Comment