18th of January 2014
சென்னை::பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலிசோடா எதிர்ப்பார்ப்புக்குள்ளான படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி தயாரித்துள்ள இப்படம், முழுக்க முழுக்க சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கும் சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த இயக்குநர் லிங்குசாமி, படத்தை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல், தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடவும் செய்கிறார்.
எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை கானாபாலா எழுதியுள்ளார். படத்தில் மொத்தம் 8 பாடல்களாம். மேலும், இப்படத்தில் 7 நிமிடத்திற்கும் மேலாக ஓடக்கூடிய ஒரு சண்டைக்காட்சியை, ஒரே ஷாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தார், தான் இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளர், சிறுவர்களை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட சண்டைக்காட்சி எடுப்பதற்காக பல முறை, ஒத்திகைப் பார்க்கப்பட்டதாம். இந்த சண்டைக்காட்சி படத்தில் மிகவும் பேசப்படும் அளவுக்கு வந்துள்ளதாம்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய விஜய் மில்டன், "ஏற்கனவே நான் ஒரு படம் இயக்கியுள்ளேன். பிறகு ஆறு வருடங்கள் கழித்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். மிக மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரையும் வியக்க வைக்கும். பட்ஜெட் குறைவுதான் என்றாலும், படம் ஏதோ பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம் போல, ஒவ்வொரு காட்சிகளும் பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும்.
படம் முழுவதும் கோயம்பேடு மார்கெட்டில் நடக்கும். அங்கு தினமும், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வருவார்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதில் இரட்டிப்பாகும், அப்படிப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த ரொம்பவே சிறமமாக இருந்தது. ஆனால், கூட்டத்தோடு கூட்டமாக, கேமராவை மறைத்து வைத்து நாங்கள் படம்பிடித்தோம்." என்று தெரிவித்தார்.
'கோலிசோடா' படம் வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.

Comments
Post a Comment