6th of January 2014
சென்னை::ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். நடக்கவில்லை..
அடுத்ததாக ஜனவரி முதல்வாரத்திற்கு விழாவை மாற்றி வைத்தார்கள். பின்னர் அதுவும் தள்ளிப்போனது. ஆனால் இப்போது ரஜினி ரசிகர்களுக்கு உறுதியான ஒரு நல்ல செய்தியாக, வரும் பிப்ரவரி-15ஆம் தேதி ‘கோச்சடையான்’ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள்.
ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட ‘கோச்சடையான்’ தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல்-14க்கு தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல ஆடியோ ரிலீஸும் தள்ளிப்போனதால் ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். இந்த செய்தியால் இனி காதலர்தின கொண்டாட்டத்துடன் சேர்த்து அது முடிந்த அடுத்த நாளே தலைவர் படத்தின் ஆடியோ ரிலீஸ் கோலாகலத்துக்கும் தயாராகிவிட மாட்டார்களா என்ன?

Comments
Post a Comment